கட்டணத்தை குறைக்க முடியாது. ஆட்டோ டிரைவர்கள் அறிவிப்பு
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அரசாங்கம் இரட்டிப்பாக்கினாலும், கட்டணத்தை குறைக்க முடியாது என முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நாளொன்றுக்கு 5 லீற்றர் என்ற அடிப்படையில் 6 நாட்களுக்கு 30 லீற்றர் பெற்றோல் வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் 5 லீற்றர் பெற்றோல் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
உராய்வு எதிர்ப்பு எண்ணெய், டயர்கள், ட்யூப்கள், பேட்டரிகள் மற்றும் வாகன சேவைக் கட்டணங்கள் மீதான வரிகள் இன்னும் அதிகமாக இருப்பதால், இந்த உயர்வு சேவையைத் தக்கவைக்க உதவாது என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
480 ரூபாவாக இருந்த பெட்ரோலின் விலை 3 முறை 370 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படாததால் விலையை குறைக்க முடியவில்லை எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
மேல்மாகாணத்தில் முச்சக்கரவண்டிகளுக்கு 10 லீற்றர் எரிபொருளை வழங்குவதற்கான பதிவு நடவடிக்கைகள் நவம்பர் 1ஆம் திகதியும், ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு நவம்பர் 6ஆம் திகதி முதல்ம் வழங்குவதற்கான பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.