இலங்கையின் நிதித்துறை பாதுகாப்பை பலப்படுத்த உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டாலர்
நிதித்துறை பாதுகாப்பை வலுப்படுத்த 150 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் அனுமதியை இலங்கை பெற்றுள்ளது.
இலங்கையின் நிதித்துறை பாதுகாப்பை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கியின் நிறைவேற்று சபை அங்கீகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பில், உலக வங்கி இன்று (09) பின்வரும் வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளதாக இலங்கை மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தில் கவனம் செலுத்தி, இலங்கையின் நிதித்துறை பாதுகாப்பு மற்றும் நிதி நிறுவன திறனை வலுப்படுத்த உலக வங்கி நிதியை வெளியிட ஒப்புக்கொண்டுள்ளது..