Thu, Nov 21, 2024
முக்கியச் செய்திகள்

அடுத்த மாதம் முதல் இலங்கையில் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்படும்.

அடுத்த மாதம் முதல் இலங்கையில் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்படும்.
  • PublishedNovember 18, 2023

இலங்கையில் மசாலாப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது, அது தொடர்பான பொருட்களை விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள் தர சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும்.

வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இலங்கையின் மசாலாப் பொருட்களுக்கு அதிக கிராக்கி காணப்பட்டாலும், மசாலாப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தும் பணி ஒழுங்கு இதுவரையில் எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மசாலா ஏற்றுமதியாளர்கள் அந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், மசாலா பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினரின் மசாலாப் பொருட்களுக்கான தரத்தை உறுதிப்படுத்தும் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, வாசனை திரவியங்கள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் சந்தைப்படுத்தல் சபைக்கு அறிவித்துள்ளார்.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *