17 வயது சிறுவன் சுட்டுக் கொலை: எரியும் பாரிஸ் நகரம் – நடந்தது என்ன?
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் போக்குவரத்து சோதனையின் போது காரை நிறுத்த தவறியதால் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இது வன்முறையாக வெடித்ததால், தொடர்ந்து இரண்டாவது நாளாக, பாரிஸின் பல பகுதிகள் வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்டன. அங்கு அமைதியை நிலைநாட்ட 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆபிரிக்காவில் பிறந்த சிறுவன் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் இம்மானுவேல் மக்ரோன், “இது மன்னிக்க முடியாத குற்றம். சட்டம் தன் கடமையைச் செய்யத் தொடங்கியுள்ளது, மக்கள் அமைதியாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.