இலங்கைக்கு இஸ்ரேலிய போரினால் தொடர்ச்சியான பாதிப்புகள்: எண்ணெய் விலை உயர்வு.
போர் தொடர்கிறது. உலக அமைதி பாதிக்கப்பட்டது போன்று மத்திய கிழக்கில் அமைதி பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்தப் போர் இலங்கையையும் பாதிக்கிறது. இது வணிக முதலீடு மற்றும் பொதுவாக சுற்றுலாத் துறைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். எண்ணெய் விலை உயரும் வாய்ப்புள்ளது.