ஜனாதிபதியின் அறிவிப்பு வாகன இறக்குமதி குறித்து
வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்
வாகனங்களை இறக்குமதி செய்தால் நாடு பின்னோக்கிச் செல்லும் சாத்தியம் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக வாகன இறக்குமதியை அமல்படுத்த எதிர்பார்க்கிறோம். வாகன சந்தையில் உள்ள பிரச்சனைகளை நான் அறிவேன். ஆனால் இன்னும் நமது இருப்பு நன்றாக இல்லை. இந்நிலையில் வாகனங்களை இறக்கு மதி செய்தால் நாடு பின்னோக்கி செல்லும் வாய்ப்பு உள்ளது.
முதல் இணைப்பு
அடுத்த வருடம் முதல் அத்தியாவசிய வாகனங்களை இறக்கு மதி செய்வதற்கு படிப்படியாக அனுமதி வழங்க உத்தேசித்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். ஐக்கிய இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது, “வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டம்” குறித்து ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து, அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக நடவடிக்கையை தொடங்க அரசு இலக்கு வைத்துள்ளது.
வாகன இறக்குமதி கட்டுப்பாடு
இலங்கையின் தற்போதைய கொடுப்பனவு நிலுவை நிலைமை சாதகமாக இல்லை. பெரும்பாலான இறக்குமதிகள் அனுமதிக்கப்பட்டாலும், வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
எவ்வாறாயினும், அடுத்த வருடத்தில் இருந்து அத்தியாவசிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு படிப்படியாக அனுமதிக்க உத்தேசித்துள்ளோம். இந்த இலக்கை நோக்கிய ஒரு படியாக, இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பேருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளோம்.