Thu, Nov 21, 2024
விளையாட்டுச் செய்தி

மதுஷங்க நாடு திரும்புகிறார்

  • PublishedMarch 24, 2024

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்க பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மற்றும் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

தொடரின் முதல் சில போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலையை அவர் எதிர்கொண்டார்.

மதுஷங்க வின் காயம் தொடர்பாக எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. அவருக்கு இடது தொடை எலும்பில் காயம் ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் குணமடைந்து சிகிச்சை பெற நாடு திரும்ப உள்ளார்.

அவரை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இந்தியன் பிரீமியர் லீக் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது.

 

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *