IMF பிரதிநிதிகளுடன் ஒரு வாரத்திற்கு பேச்சு வார்த்தை
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (11) முதல் ஒரு வார காலத்திற்கு நாட்டில் தங்கியிருப்பார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சு, மத்திய வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய தரப்பினருடன் இந்தக் குழு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வசதி கிடைத்ததன் பின்னர் இந்த பிரதிநிதிகள் இந்த நாட்டின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்துவார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.