பிரேசிலில் சுற்றுலாப்பயணிகள் பேருந்து விபத்து; 25 பேர் உயிரிழந்தனர்
பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான பாஹியாவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டிரக் மீது மோதியது.
இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்த 6 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (07) இரவு பாஹியாவில் உள்ள நோவா பாத்திமா மற்றும் காவியாவோ நகரங்களுக்கு இடையிலான வீதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் லாரியில் இருந்த 3 பேரும், பேருந்தில் இருந்த 22 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 8 ஆண்களும், 17 பெண்களும் அடங்குவர், ஒருவர் கர்ப்பிணி.