இன்று முதல் டெங்கு ஒழிப்பு விசேட வாரம்
இன்று (07) முதல் விசேட டெங்கு தடுப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட 70 சுகாதார உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கி இந்த டெங்கு தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் சமூக சுகாதார நிபுணர் டொக்டர் அனோஜா தீர்சிங்க தெரிவித்தார்.
இது தொடர்பான வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு இன்று அறிவிக்கப்படும் என விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அனோஜா தீர்சிங்க குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக வைத்திய நிபுணர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்கான இலங்கை மருத்துவ சங்கத்தால் நியமிக்கப்பட்டது.