உயர்தர அட்டவணையில் சிறிய மாற்றம்
உயர்தர அட்டவணையில் ஏற்பட்டுள்ள சிறிய மாற்றம் குறித்து பரீட்சார்த்திகள் கவனம் செலுத்துமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், இதேவேளை, அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகளில் அமைந்துள்ள உயர்தர பரீட்சை நிலையங்களுக்கு பதிலாக மாற்று பாடசாலைகளை தயார்படுத்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம், கெக்கிராவ, பொலன்னறுவை, பசறை, அம்பாறை, மட்டக்களப்பு, ஹசலகா ஆகிய பிரதேசங்களில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.