Thu, Nov 21, 2024
வானிலை அறிக்கை

இன்றைய வானிலை தொடர்பான அறிக்கை

இன்றைய வானிலை தொடர்பான அறிக்கை
  • PublishedJanuary 3, 2024

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை இன்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக கிரெஸ்ட் வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

வானிலை குறித்து அவர் மேலும் கூறியதாவது,

கிழக்கு மாகாணம் மற்றும் மாத்தளை மாவட்டத்திலும் லேசான மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையான மிதமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கக் கூடிய சாத்தியமுள்ள சூழ்நிலைகளில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொத்துவில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு கிழக்கு திசையில் இருந்து கடல் பகுதிகளில் மணிக்கு 25 – 35 கிமீ வேகத்தில் காற்று வீசும்.

கொழும்பில் இருந்து புத்தளம், மன்னார் முதல் காங்கேசன்துறை மற்றும் பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரிக்கக் கூடும். இவ்வாறான சமயங்களில் இந்த கடல் பகுதிகள் சற்று கொந்தளிப்பாக காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் போது கடற்பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *