செங்கடல் பாதுகாப்பு நடவடிக்கையில் 10 நாடுகள்
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு மத்தியில் பல கப்பல் நிறுவனங்கள் நடவடிக்கைகளை நிறுத்திவிட்ட நிலையில், செங்கடல் வர்த்தகப் பாதையை பாதுகாக்க சர்வதேச இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா அறிவித்துள்ளது. பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் பத்து நாடுகளின் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
கடந்த வார இறுதியில் இந்தப் பகுதியில் 15 ஆளில்லா விமானங்களை தங்கள் போர்க்கப்பல்கள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்காவும் பிரிட்டனும் தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. காசா போர் தொடங்கியதில் இருந்து, ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் அல்லது இஸ்ரேலியர்களுடன் தொடர்புடைய கப்பல்களை குறிவைத்து ஆளில்லா விமானம் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், முக்கிய எண்ணெய் நிறுவனமான பி.பி. செங்கடல் வழியாக எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.