இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு கொடுப்பனவு இல்லை
இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இந்த வருடத்திற்கான போனஸ் கொடுப்பனவுகளோ அல்லது வேறு கொடுப்பனவுகளோ வழங்கப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 25% சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்த வேண்டாம் எனவும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், அதிகாரிகள் வாடகைக்கு எடுத்த பல்வேறு சலுகைகள், கொடுப்பனவுகள், வாகனங்கள், மின்சார சபை அதிகாரிகளுக்கு செலுத்தப்பட்ட வாடகைகள் குறித்த அறிக்கையை வழங்குமாறு மின்சார சபைத் தலைவரிடம் அமைச்சர் கேட்டுள்ளார்.