Fri, Nov 22, 2024
வானிலை அறிக்கை

அதிக வாகன நெரிசல் காரணமாக கொழும்பு – பதுளை பிரதான வீதியின் ஒரு பகுதி தடைப்பட்டுள்ளது

அதிக வாகன நெரிசல் காரணமாக கொழும்பு – பதுளை பிரதான வீதியின் ஒரு பகுதி தடைப்பட்டுள்ளது
  • PublishedDecember 11, 2023

 

மோசமான காலநிலை நிலவுவதனால் பதுளை – கொழும்பு வீதியின் ஒரு பகுதி கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று ஹாலியெல்ல உடுவர பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் மேஜர் சுதர்சன் தெனிப்பிட்டிய மற்றும் பதுளை மாவட்ட செயலாளர் ஸ்ரீ பிரபாத் அபேவர்தன ஆகியோர் தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடம்பிட்டிய மல்லிகதென்ன ஊடாக பண்டாரவளை வீதியை அந்த வீதியில் பயணிக்கும் கனரக வாகனங்களுக்கு மாற்று வீதியாகப் பயன்படுத்த முடியும்.

கொழும்பு – பதுளை பிரதான பாதையை பயன்படுத்தும் பயணிகள் போக்குவரத்து பஸ்களும் இந்த மாற்று பாதையில் நாளை முதல் இயங்கும்.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *