2024 முதல் சீனாவிற்கு கருவாப்பட்டை ஏற்றுமதி
உள்நாட்டு கருவாப்பட்டை சீன சந்தையில் அதிக தேவை காணப்படுவதால், அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து வருடாந்தம் இரண்டு பில்லியன் டொலர் பெறுமதியான கருவாப்பட்டையை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஏற்றுமதியானது நாட்டின் கருவா சந்தைக்கு பெரும் சாதகமாக அமையும் என கருவா அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர தெரிவித்தார். பல வருட கோரிக்கைகளின் பலனாக அண்மையில் ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது அனுமதி கிடைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.