08 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பாசறை பிரதேச செயலகத்திற்கு 03 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 08 மாவட்டங்களில் இனங்காணப்பட்ட பகுதிகளுக்கு 1ஆம் நிலை மற்றும் 2ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கண்டி, கேகல, குருநாகல், மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.