விமான நிலையத்தில் தன்னியக்க முக அடையாள கண்காணிப்பு
குற்றவியல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய பயணிகளை அடையாளம் காண்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் தானியங்கி முக அடையாள கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாள கண்காணிப்பு நிறுவப்பட்டுள்ளது.