விண்கல் பொழிவைக் காண இலங்கையர்களுக்கும் வாய்ப்பு உள்ளது
லியோனிட் விண்கல் மழையின் உச்சத்தை இலங்கையர்களும் காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளையும் (18.11.2023) நாளை மறுதினமும் இலங்கையர்கள் இதனைக் காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியலாளர் ஜானக அதசூரிய தெரிவித்துள்ளார்.
விண்கற்கள்
எனவே, இந்த இரண்டு நாட்களிலும் அதிகாலை 2.00 மணிக்குப் பிறகு இந்த விண்கல் மழை கிழக்கு அடிவானத்தில் தெரியும்.
ஒரு மணி நேரத்திற்கு 10-15 விண்கற்கள் தெரியும்.