வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் (ஆப்) ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்தார்.
இரண்டு கணக்குகள்
இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த முடியும்.
மேலும், ஒரு போனில் இரண்டு வாட்ஸ்அப் செயலிகளை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
இந்த அம்சம் முதலில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். விரைவில் மற்ற பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்களின் தேவைக்கேற்ப வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.