மாவீரர் நினைவேந்தலுக்கு தடை கோரிய மனுக்கள், சுமந்திரனின் சட்ட வாதத்தை அடுத்து நிராகரிப்பு.
சுமந்திரனின் சட்ட வாதத்தையடுத்து, மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்யக்கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை நீதிமன்றம் இன்று (17.11.2023) நிராகரித்துள்ளது.
இந்த நிகழ்வை தடை செய்யுமாறும், முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய பிரமுகர்கள் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம் என தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் மட்டக்களப்பு மற்றும் கொக்கட்டிச்சோலி பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அந்த விண்ணப்பங்கள் இன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.