மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை சந்திக்க வரையறுக்கப்பட்ட நேரம்
மாத்தறை சிறைச்சாலைக்கு கைதிகளை பார்வையிட அனுமதிக்கப்படும் நேரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மாத்தறை சிறைச்சாலையில் 08 கைதிகள் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்படி உயிரிழந்த கைதியின் உயிரியல் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக இன்றும் (24) நாளையும் (25) கைதிகளை பார்வையிடும் விஷேட தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இன்றும் நாளையும் கைதிகளின் வருகை நடவடிக்கைகளை மட்டுப்படுத்த சுகாதார திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாட்டார் தினத்தில் கைதிகளின் விடுதலை தொடர்பில் விசேட கவனம் செலுத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.