மலைவாழ் தமிழ் மக்களுக்காக தமிழகமும் குரல் கொடுக்கும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
“இலங்கையை வாழவைத்த மலையகத் தமிழ் மக்களை சகல உரிமைகளுடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக முல்லைக்கொடியான தமிழகமும் குரல் கொடுக்கும்.” தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
‘நாம் 200’ தேசிய நிகழ்விற்கான வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களின் வாழ்வு 200 வருடங்களை எட்டுகிறது.இரண்டு நூற்றாண்டுகளாக மாபெரும் இனமாக வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.இந்த நிகழ்வில் காணொளி மூலம் உரையாற்ற அழைத்த ஜீவன் தொண்டமானுக்கு நன்றி.