Thu, Nov 21, 2024
உள்நாட்டு செய்தி

பிரதேச செயலகங்கள் ஊடாக TIN இலக்கம் வழங்குவதற்கு அரசாங்கம் கவனம்

  • PublishedJanuary 9, 2024

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வரிப் பதிவு இலக்கம் அல்லது TIN ஐ இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் முறையான முறைமையொன்று தயாரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி பிரதேச செயலகத்தினூடாக TIN இலக்கத்தை பெற்றுக்கொள்வது தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல் இன்று நிறைவுபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் Daily Ceylon News சேவைக்கு தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களின் தரவுகளை உள்ளடக்கிய அரச நிறுவனங்களின் ஊடாக TIN இலக்கத்தை விரைவாக வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வருமான வரி செலுத்தாதவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *