பஸ்- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி
எல்பிட்டி ஓமத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்றுள்ளது.
ஓமத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எல்பிட்டியில் இருந்து ஓமத்தை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் ஓமத்தாவில் இருந்து எல்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காலி பிரதேசத்தில் நடைபெறவுள்ள தேசிய மக்கள் சக்தி பெண்கள் மாநாட்டிற்கு கட்சி உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக எல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.