நாளை 16 மணி நேரம் தண்ணீர் வெட்டு
காலியின் பல பகுதிகளில் நாளை 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி, காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
காலி ஹபுகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
இதன்படி போபே, பொத்தல, ஹபுகல, ஹபராதுவ, புஸ்ஸ, அக்மீமன மற்றும் ரத்கம ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.