Thu, Nov 21, 2024
உள்நாட்டு செய்தி

தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.1700

  • PublishedDecember 8, 2023

 

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கூட்டு உடன்படிக்கை செய்து தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூபா 1700 வழங்குமாறும் அல்லது அதிகரிக்கப்பட்ட சம்பளம் குறித்து டிசம்பர் மாதத்திற்கு முன்னர் அறிவிக்குமாறும் தோட்டக் கம்பனி பிரதானிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். 31.

இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தோட்டக் கம்பனிகளின் பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு அமைவாக பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் தமது வேலைத்திட்டங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ஒரு குழுவையும், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மற்றுமொரு குழுவையும் நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்றுமதி பொருளாதாரத்தில் தமக்கு வலுவான நம்பிக்கை இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைவரினதும் பங்களிப்பு அவசியம் எனவும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஆசிய நாடுகளின் சனத்தொகை அதிகரிப்புடன் உணவுக்கான தேவையும் அதிகரிக்கும் எனவும், அதற்கு நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரம் தயாராக வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *