டொலரின் பெறுமதியில் மீண்டும் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
நேற்றைய ஒப்பிடுகையில் இன்று (16.11.2023) அமெரிக்க டாலரின் மதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.11.2023) நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 333.66 ரூபாவாகவும், கொள்வனவு விலை 323.35 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன், கனேடிய டொலரின் விற்பனை விலை 245.05 ரூபாவாகவும், கொள்வனவு விலை 234.38 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்டு மற்றும் யூரோவின் மதிப்பு
இதன்படி யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 363.56 ரூபாவாகவும் கொள்வனவு பெறுமதி 348.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்ரேலிங் பவுண்டின் இன்றைய விற்பனை விலை ரூ.415.15 ஆகவும், கொள்முதல் விலை ரூ.399.46 ஆகவும் பதிவாகியிருந்தது.