Fri, Nov 22, 2024
Breaking News

ஜனவரி முதல் தொலைபேசி சேவை கட்டணம் உயரும்

ஜனவரி முதல் தொலைபேசி சேவை கட்டணம் உயரும்
  • PublishedDecember 31, 2023

வாட் வரியை திருத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில், வரும் ஜனவரி 1ம் தேதி முதல் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வரிகள் அதிகரிக்கப்படும் என தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

VAT வரியை 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இதன் காரணமாக தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வரியும் 3 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி அழைப்புக் கட்டணம், இணையச் சேவைக் கட்டணம், கட்டண தொலைக்காட்சி சேவைக் கட்டணம் என அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என தொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சில ப்ரீபெய்ட் கார்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை மற்றும் வழங்கப்பட்ட டேட்டா கோட்டாவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அனைத்து இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா, VAT காரணமாக தனது வர்த்தகம் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *