சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு
சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
425 கிராம் டின் மீனின் புதிய விலை ரூ.475
ஒரு கிலோ கிழங்கின் புதிய விலை ரூ.280
ஒரு கிலோ சிவப்பு பச்சை அரிசியின் புதிய விலை ரூ.175
சிவப்பு பருப்பின் புதிய விலை கிலோ ரூ.309
ஒரு கிலோ வெள்ளை நாடாரிசியின் புதிய விலை ரூ.206
ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசியின் புதிய விலை 199 ரூபா எனவும் லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று (28) முதல் அமலுக்கு வருகிறது.