கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது
வடக்கு புகையிரத பாதை அபிவிருத்தி காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான புகையிரத சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நிலா ரயில் திருகோணமலைக்கு செல்லும் என ரயில்வே திணைக்கள பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபொல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான புகையிரத பாதை அபிவிருத்தியின் காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை மற்றும் யாழ்ப்பாணம் வரையான புகையிரத சேவை எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.
அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும் காலப்பகுதியில் அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை இரண்டு விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் யாழ்பாணம் ரயில் அனுராதபுரத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து திருகோணமலை செல்லும் எனவும் அவர் தெரிவித்தார். திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு புறப்படும்.