குழந்தைகளுக்கு சுவாச நோய் பரவும் அபாயம்
இந் நாட்களில் குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
பொது இடங்களுக்குச் செல்லாமல் குழந்தைகளை விலக்கி வைக்க வேண்டும் என சுகாதாரப் பணிகள் துணைப் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டார்.
முடிந்தவரை முகமூடிகளை அணிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.