Thu, Nov 21, 2024
வானிலை அறிக்கை

குகுலே கங்கை வான் கதவுகள் திடீரென திறப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

குகுலே கங்கை வான் கதவுகள்  திடீரென திறப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
  • PublishedNovember 17, 2023

தொழில்நுட்ப கோளாறு காரணமாக குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திடீரென திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வினாடிக்கு 500 கன மீட்டர் அளவுக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என்று நீர்வழித் துறையின் நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவு இயக்குநர் பொறியாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வரா தெரிவித்தார்.

இதன் காரணமாக குடா கங்கைக்கு அண்மித்த புளத்சிங்கள, அயகம மற்றும் பாலிந்தனுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் உடனடி வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார். அடுத்த 6 மணி நேரத்தில் இந்த ஆபத்து ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *