கிராம சேவகர் (GS) தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?
டிசம்பர் 2ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் நடைபெற்ற 2388 கிராம சேவகர் ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சையின் முதற்கட்ட முடிவுகள் எதிர்வரும் 45 நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் அனைத்து கிராம சேவையாளர்களுக்கான நியமனங்களும் 2024 பெப்ரவரி மாதத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ள வெற்றிடங்களின் அடிப்படையில் மேற்படி போட்டிப் பரீட்சைக்கான அடுத்த கட்ட நேர்முகப் பரீட்சைக்கு அந்தப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விண்ணப்பதாரர்களின் எழுத்துப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள்.
மேற்படி நேர்முகத்தேர்வில் பெறப்படும் பெறுபேறுகள் ஏற்கனவே எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட பெறுபேறுகளுடன் இணைக்கப்பட்டு இறுதியாக வெற்றிடங்களுக்கு ஏற்ப சிறந்த புள்ளிகளைப் பெற்றவர்கள் கிராம சேவகர்களாக நியமிக்கப்படுவார்கள்.