Thu, Nov 21, 2024
உள்நாட்டு செய்தி

காசாவில் போர் நிறுத்தத்தை கோரும் ஐநா தீர்மானம் – ஆஸ்திரேலியா ஆதரவாக வாக்களித்தது.

காசாவில் போர் நிறுத்தத்தை கோரும் ஐநா தீர்மானம் – ஆஸ்திரேலியா ஆதரவாக வாக்களித்தது.
  • PublishedDecember 14, 2023

காசாவில் போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற ஐநா பொதுச் சபையின் மனிதாபிமான தீர்மானத்திற்கு ஆதரவாக ஆஸ்திரேலியா வாக்களித்துள்ளது.

மனிதாபிமான தீர்மானத்திற்கு ஆதரவாக ஆஸ்திரேலியா உட்பட 152 நாடுகள் வாக்களித்தன.

கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

அமெரிக்கா உட்பட 10 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்ததோடு, பிரிட்டன் உட்பட 23 நாடுகள் வாக்களிக்கவில்லை.

மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் ஆஸ்திரேலியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் இந்த நிலையை பலவீனமாக வர்ணித்துள்ளன.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *