கட்டணம் செலுத்தாத 95,000 பேருக்கு நீர் வெட்டு
கடந்த ஒக்டோபர் மாதம் வரை பணம் செலுத்தாத 95,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒக்டோபர் 31ஆம் திகதி நிலவரப்படி துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை 95,241 எனவும், 12.97 பில்லியன் ரூபா நிலுவைத் தொகை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.