Thu, Nov 21, 2024
மருத்துவம்

ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்?

ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்?
  • PublishedNovember 18, 2023

இங்குள்ள பலருக்கு, காபி எனப்படும் உற்சாகமூட்டும் பானம் இல்லாமல் காலை நேரம் முழுமையடையாது. இதுபோன்ற காபி குறித்து பல்வேறு உடல்நலம் தொடர்பான கருத்துகள் நிலவி வரும் நிலையில், ஒரு நபர் ஒரு நாளைக்கு 25 கப் காபி குடித்தாலும் ஒன்றும் ஆகாது என புதிய ஆய்வு ஒன்று காபி பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

காபியில் உள்ள அதிக அளவு காஃபின் இதய நோயை உண்டாக்கும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. திடீரென மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் தினமும் காபி குடிக்கிறார்கள்.

இந்நிலையில் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம் 8,000 பேரை தேர்வு செய்து ஆய்வு நடத்தியது. இதன்படி தினமும் ஒரு கப், மூன்று கப், பல கப் என காபி குடிப்பவர்கள் நடத்திய ஆய்வில் காபியால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதனால், ஒரு நாளைக்கு 25 கப் காபி வரை குடிப்பதால் கூட எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இந்த ஆய்வு முடிவு செய்துள்ளது. இந்தச் செய்தியால் தேசிய பானமான காபி காப்பாற்றப்பட்டது, காபி பிரியர்கள் மகிழ்ச்சி!

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *