ஊழியரின் முறைகேடானே செயல்: பொதுமக்கள் மடக்கி பிடிப்பு.
யாழ்ப்பாணம் செம்மணி நாயன்மார்கட்டு பகுதியில் கழிவுநீரை கொட்டி விட்டு செல்ல முயன்ற வவுச்சர் வண்டியை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
நேற்று (18.11.2023) திருநெல்வேலியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் கழிவு நீரை அகற்றிய வவுச்சர் வேன் பிடிபட்டது.
வவுசர் வண்டி இவ்வாறு கழிவுகளை கொட்டுவதை அவதானித்த பிரதேசவாசிகள் வவுசரில் வந்தவர்களை மறைத்து கழிவு நீரை ஊற்றும் போது கையும் களவுமாக பிடித்து சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஹோட்டல்களில் உயர்தரம் போல் நடிப்பவர்கள் பொது இடங்களில் தரக்குறைவாக நடந்து கொள்வதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.