உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி 2600க்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளதுடன் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களை சென்றடையுமாறு பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர கேட்டுக்கொண்டுள்ளார்.
பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதி அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும் என்றும் அவர் கூறினார்.