Thu, Nov 21, 2024
தொழில்நுட்பம்

இஸ்ரோ மற்றுமொரு சாதனை

இஸ்ரோ மற்றுமொரு சாதனை
  • PublishedJanuary 6, 2024

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்துள்ளது.

செவ்வாய் மற்றும் சந்திரனைத் தொடர்ந்து சூரியனின் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்யும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி பிஎஸ்எல்வி-சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன், எல்-1ல், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசை சமமாக உள்ளது. அந்த இடத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம், சூரிய வெளியின் வெப்பச் சூழல் மற்றும் கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது.

ஏறக்குறைய 127 நாட்கள் பல கட்ட பயணத்தை முடித்த ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் பணியை மேற்கொண்டனர். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த விண்கலம் சூரியனை தொடர்ந்து ஆய்வு செய்யும். விண்வெளித் துறையில் இஸ்ரோ புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *