இஸ்ரேலுடனான உறவை முறித்துக் கொண்ட முதல் அரபு நாடு இதுவாகும்
இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டிக்கும் முயற்சியில் இஸ்ரேலுக்கான தனது தூதரை திரும்பப் பெறுவதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது.
இதேவேளை, பஹ்ரைனுக்கான இஸ்ரேலிய தூதுவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், இஸ்ரேலுடனான பஹ்ரைனின் பொருளாதார உறவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.
காஸா மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பஹ்ரைன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இன்று வரை போரில் ஈடுபட்டு வருகிறது.
ஐ.நா உட்பட பல்வேறு நாடுகளும் இஸ்ரேலிடம் போர் நிறுத்தம் கோரிய போதிலும், இஸ்ரேல் பிரதமர் அதனை புறக்கணித்துள்ளார்.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து பல அரபு நாடுகள் கோபமடைந்தாலும், பஹ்ரைன் மட்டும் தனது உறவை துண்டித்துள்ளது.
அதேபோல் தென் அமெரிக்க நாடான ஒலிவியாவும் இஸ்ரேலுடனான உறவை துண்டித்துள்ளது.