Thu, Nov 21, 2024
உள்நாட்டு செய்தி

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன
  • PublishedJanuary 3, 2024

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்து விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக மாறியுள்ள நிலையில், இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் பொறியியலாளர் நரேந்திர டி சில்வா இந்த சுற்றறிக்கையை விடுத்துள்ளார்.

இதன்படி, இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் நேற்று (02) முதல் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவசர காலங்களில், சம்பந்தப்பட்ட கிளை/பிரிவில் இணைக்கப்பட்டுள்ள தரம் I அல்லது அதற்கு மேற்பட்ட நிர்வாக அதிகாரியின் ஒப்புதலுடன் மட்டுமே ஊழியர்கள் விடுப்பு எடுக்க முடியும் என்றும் சுற்றறிக்கை கூறுகிறது.

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக இன்று (03) முதல் 3 நாள் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பான சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு மின்துறை அமைச்சருக்கு அறிவிக்கவுள்ளதாக அதன் முதன்மை செயலாளர் ரஞ்சன் ஜெயலால் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Written By
Ceylon Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *