இன்று நள்ளிரவு முதல் தடை
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை 2023 தொடர்பான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று (29) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக மாதிரி வினாத்தாள் விநியோகம் மற்றும் மாதிரி வினாக்களை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.