இந்திய அணி அபார வெற்றி பெற்றதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்
தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பான முறையில் விளையாடி பலரது கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேநேரம், விராட் கோலியின் 50வது ஒருநாள் சதத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.