ஆண்களை விட பெண்களுக்கு அதிக உறக்கம் தேவை,ஏன் தெரியுமா..?
பெண்களுக்கு எவ்வளவு தூக்கம் தேவை, எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பது இங்கே பாக்கலாம்ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட அனைத்து பாலினங்களுக்கும் தூக்கம் ஆனது கட்டாயம் ஆகும் என்றாலும், பெண்களுக்கு 7-8 மணி நேரத்திற்கும் மேலாக தூக்கம் தேவை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.பெண்களுக்கு மூளை சுறுசுறுப்பாகவும், உடலை புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க தூக்கம் அவசியம் ஆகும். மூளை தன்னைத்தானே சரி செய்யும் ஒரே வழி தூக்கமாக காணப்படுகிறது
தூக்கத்தின் காலம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மட்டுமல்ல, எல்லா வயதினருக்கும் மாறுபடும். குழந்தைகளுக்கு 7-9 மணி நேரமும், பெரியவர்களுக்கு 7-8 மணி நேரமும் தூக்கம் அவசியம் என கூறப்படுகிறது
வயது முதிர்ந்த ஆண்களை விட பெண்கள் சிறிது நேரம் தூங்க வேண்டும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே, பெண்கள் 7-8 மணிநேரத்திற்கு அதிகமாக தூங்க வேண்டும். அதாவது, பெண்களின் மூளை சிறிது வித்தியாசமானது, ஆண்களை விட சற்று சிக்கலானது. ஆண்களை விட பெண்கள் நிறைய வேலைகளை செய்பவர்கள். எனவே, அவர்களின் மூளை வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படும் அதனால்தான் ஆண்களை விட பெண்களுக்கு சற்று தூக்கம் தேவை என சொல்லப்படுகிறது பெரியவர்கள் சராசரியாக 7 மணிநேரம் தூங்கும்போது, பெண்களுக்கு கூடுதலாக 11-20 நிமிடங்கள் தூக்கம் தேவை.
ஆண்களை விட பெண்கள் 40% அதிகமாக தூக்கமின்மையால் நோய்கள் ஏற்படுவதாக பல ஆய்வுகளில் தெரியவருகின்றன. தூக்கமின்மை கவலை மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும். எனவே, பெண்கள் தொடர்ந்து நீண்ட தூக்கம் எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.