அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு பற்றிய முக்கிய அறிவிப்பு
வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு அடுத்த வருடம் (2024.04) ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 10,000 ரூபா கொடுப்பனவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் என நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான கொடுப்பனவுகள் ஒக்டோபர் மாதம் முதல் 6 மாத காலத்திற்குள் வழங்கப்படும் எனவும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, “அரச ஊழியர்கள், வறிய மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்த குடும்பங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டினார்.