கல்வி அமைச்சி பாடசாலைகளுக்கு அவசர அறிவிப்பு
பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவசர அறிவிப்பு
மாணவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவசர அறிவித்தல் விடுத்துள்ளார்.நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் பாடசாலை மாணவர்களை வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் பாடசாலைகளுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் பாடசாலை மாணவர்கள் அதிபர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது.
சராசரி மனித உடல் வெப்பநிலை சுமார் 37 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். தற்போது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக மனித உடலில் தொடர்ச்சியான மாற்றங்கள் இடம்பெற்று வருவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.